Wednesday 10 July 2013

Kadanathi Dam - Our water source







நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கடையம் ஒன்றியத்தில் மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த கடனா நதி அணைக்கட்டு நெல்லைமாவட்டத்தில் பாபநாசம், காரையார், மணிமுத்தாறு அணைக்கட்டுகளுக்கு அடுத்த பெரிய அணைக்கட்டு இதுவாகும். அகத்திய மலைக்கும்(பாபநாசம்) குறவஞ்சி(குற்றாலம்) மலைக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்த அணைக்கட்டிற்கு தோணியாறு(பனிச்சி), கல்லாறு(பாம்பாறு, நெடும்பாறை) என்ற இரு நீர்வீழ்ச்சிகள் வழியாக நீர் கிடைக்கிறது. 85 அடிகள் கொண்ட இந்த அணைக்கட்டு தற்போது பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது, ஏழு மதகுகளைக்கொண்டது. சுற்றுவட்டார விளைநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதரமாக இந்த அணைக்கட்டு உள்ளது. தமிழக முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களால் 1969 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.